கோவையில் போதை ஊசி செலுத்தி இளைஞரை கொலை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளலூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கு அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில், அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
உடலில் இருந்த டாட்டூ மூலம் நடத்திய விசாரணையில் உயிரிழந்தது மதுரையை சேர்ந்த சூர்யா என்பதும், சென்னையில் உள்ள கல்லூரியில் அவர் படித்து வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் பேரூர் பகுதியில் தங்கி இருந்த அவரது நண்பர்கள் கார்த்திக், மாதேஷ், நரேன் கார்த்திக், முகமது ரஃபி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
தனது காதலியுடன் சூர்யா பழகி வந்ததால் ஆத்திரமடைந்த கார்த்திக், அவருக்கு போதை ஊசி செலுத்தியதுடன் தலையணையால் முகத்தை அழுத்தி கொலை செய்தது அம்பலமானது.