கர்நாடக மாநிலம், கலபுரகி பகுதியில் உள்ள கிம்ஸ் அரசு மருவத்துவனையின் லிப்டில் சிக்கிய 9 ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மருத்துவமனை ஊழியர்கள் 6வது மாடி செல்வதற்காக லிப்டில் ஏறியுள்ளனர். 3வது மாடியில் லிப்ட் பழுதாகி நின்ற நிலையில், அதன் கதவை அவர்கள் போராடி திறந்துள்ளனர். அப்போது வெளியே சுவர் இருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அந்த சுவற்றை உடைத்து ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பின் 9 ஊழியர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். 3வது மாடிக்கு லிப்ட் தேவையில்லை என்பதால் அங்கு சுவர் எழுப்பப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.