ஒடிசா மாநிலம், கோபால்பூரில் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புக்காக குறைந்த செலவில் SDAL நிறுவனம் தயாரித்த பார்கவஸ்த்ரா ராக்கெட் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது.
இந்திய எல்லைகளில் அதிகரித்து வரும் டிரோன் தாக்குதல்களை எதிர்கொள்ளும் நோக்கில், சோலார் டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் லிமிடெட் நிறுவனம் குறைந்த செலவிலான பார்கவஸ்த்ரா எனும் ராக்கெட்டை வடிவமைத்தது.
இந்நிலையில் ஒடிசா மாநிலம், கோபால்பூரில் உள்ள கடற்கரையில் பார்கவஸ்த்ரா ராக்கெட்டுகள் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டன. அப்போது ஒரே நேரத்தில் இரண்டு பார்கவஸ்த்ரா ராக்கெட்களை ஏவி இந்திய ராணுவம் இலக்கை தாக்கி சோதனை நடத்தியது. மொத்தம் 3 சோதனைகளில் ஏவப்பட்ட 4 ராக்கெட்கள் வானில் பறந்த ட்ரோன்களை வெற்றிகரமாக தாக்கி அழித்தன.
இந்த ராக்கெட்டுகள் இரண்டரை கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ளாக வரும் ட்ரோன்களை குறி வைத்து தாக்கி அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்திய வான்வழியின் பாதுகாப்பு மேலும் பலமடைந்துள்ளது.