இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 34 மடங்கு அதிகரித்து உள்ளது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் பாதுகாப்பு துறை முன் எப்போதும் இல்லாத வகையில் வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த வளர்ச்சிக்கு ‘தன்னிறைவு பெற்ற இந்தியா’ திட்டம் ஊக்கமளித்து வருவதாகவும், 2013- 2014 ம் நிதியாண்டில் 686 கோடி ரூபாயாக இருந்த பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி, 2024- 2025ம் நிதியாண்டில் 23, 622 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
2013- 2014 ம் நிதியாண்டின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியை ஒப்பிடுகையில் இது 34 மடங்கு அதிகம் எனவும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.