ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் பஜ்ரங்கள் பண்பாட்டு பயிற்சி முகாமில் பங்கேற்ற இளைஞர்கள், தாங்கள் கற்றுக் கொண்ட சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளை நிர்வாகிகள் முன்னர் செய்து காண்பித்தனர்.
கோபிசெட்டிபாளையத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் இளைஞர்களுக்கான பஜ்ரங்கள் பண்புப் பயிற்சி முகாமும், பொறுப்பாளர்களுக்கான பரிஷத் முகாமும் தொடங்கியது.
இதில் பங்கேற்ற இளைஞர்களுக்கு தியானம், பிரார்த்தனை, சிலம்பம், கராத்தே, யோகா, வில்வித்தை உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில் பயிற்சியின் நிறைவு நாளான புதன்கிழமையன்று விஷ்வ இந்து பரிஷத்தின் வட தமிழ்நாடு தென் தமிழ்நாடு மாநில அமைப்பு செயலாளர் பாலாஜி, வட தமிழக பஜ்ரங்கள் பொறுப்பாளர் கிரண், மாநில அமைப்பு செயலாளர் ராமன் ஆகியோர் முகாமுக்கு வருகை தந்தனர். அவர்கள் முன்னிலையில் இளைஞர்கள் தாங்கள் கற்றுக் கொண்ட பயிற்சிகளை செய்து காட்டினர்.