கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அரசு பேருந்தை ஓட்டுநர் மது போதையில் இயக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சிவகாசி நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை விருதுநகரை சேர்ந்த அருள் மூர்த்தி என்பவர் மதுபோதையில் ஓட்டி சென்றார். அப்போது பேருந்தை அருள்மூர்த்தி தாறுமாறாக இயக்கியதால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கூச்சலிட்டுள்ளனர்.
தொடர்ந்து பேருந்தை நடுவழியில் நிறுத்திய ஓட்டுநர் அருள்மூர்த்தி ஸ்டியரிங் மேல் படுத்து உறங்கியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடம் சென்ற போலீசார் ஓட்டுநரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.