கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து, சாயக்கழிவு கிராமத்தில் ஆறாக ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் சிப்காட்டில் லாயல் சூப்பர் ஃபேப்ரிக்ஸ் என்ற தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள 6 லட்சம் லிட்டர் சாயக்கழிவு கொள்ளளவு கொண்ட பாய்லர் அதிக அளவிலான சூடு காரணமாக நள்ளிரவு வெடித்து விபத்துக்குள்ளானது.
தொடர்ந்து, அருகில் உள்ள குடிகாடு கிராமத்தில் சாயக்கழிவு ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்து வந்த காவல் மற்றும் தீயணைப்புத்துறையினர் உடல்நலம் பாதிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்டரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். மேலும், அப்பகுதி வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.