சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த சில நிர்வாகிகளை கண்டித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சில நிர்வாகிகள் புதிதாக தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு அமைப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த போராட்டத்தில் நடிகர்கள், இயக்குநர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.