புழல் சிறை வார்டனால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ரவுடி நாகேந்திரனின் சகோதரர் முருகனுக்கு, உரிய சிகிச்சை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சிறை மருத்துவரிடம் சிகிச்சை பெற சென்றபோது சிறை வார்டன் கார்த்திக்கால் அவர் தாக்கப்பட்டதாகவும் கூறி முருகனின் மனைவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தனது மனுவில் முருகனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் முருகனுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியதுடன், சிசிடிவி பதிவுகளை சமர்பிக்கவும் சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.