தந்தை ரொனால்டோவை போலவே, மகன் சாண்டோஸ், 7-ம் நம்பர் ஜெர்சியை அணிந்து விளையாடிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகன் சாண்டோஸ் ஜூனியர், விளாட்கோ மார்கோவிக் சர்வதேச தொடரின் முதல் போட்டியில் போர்ச்சுகல் நாட்டுக்காக 15 வயதுக்குட்பட்ட தேசிய அணியில் அறிமுகமானார்.
இந்தப் போட்டியில், சாண்டோஸ் இடம்பெற்ற போர்ச்சுகல் இளைஞர் அணி ஜப்பானை 4 க்கு1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. போர்ச்சுகல் அணிக்காகத் தனது மகன் அறிமுகமானதை அடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.