தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, இலுப்பூர், திருமயம், ஆலங்குடி அன்னவாசல் போன்ற பல்வேறு பகுதிகளில் திடீரென்று இரவு ஒரு மணி நேரத்துக்கு மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது.
என்றாலும் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னல், சூறைக்காற்றுடன் பெய்த கனமழை வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தியது.
காலையில் கடுமையாக இருந்த வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்ட நிலையில், இந்த திடீர் மழை மக்களையும் விவசாயிகளையும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.