மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டின் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது.
அதன்படி, சமீபத்தில் இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் இலங்கைக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் ஸ்மிருதி மந்தனா சதம் அடித்தார்.
இதனால் அவர் 727 புள்ளிகள் மூலம் 2-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வோல்வார்ட் உள்ளார்.