கர்நாடகாவில் தனது தந்தையைக் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு விபத்து போல் நாடகமாடிய மகன் சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கியுள்ளார்.
கர்நாடகா மாநிலம் தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகேஷ், அவரது மகன் சூர்யா ஆகியோர் ஐஸ்தொழிற்சாலையில் பணி புரிந்து கொண்டிருந்தனர்.
அங்கே நாகேஷ் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டதாக சூர்யா கூறிய நிலையில் போலீசார் சடலத்தைக் கைப்பற்றினர். இதற்கிடையே மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நாகேஷ் சகோதரி காவல்துறையில் புகார் அளிக்க, சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அதில் தந்தை நாகேஷை சூர்யா கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும் அதன் பிறகு சம்பவத்தைத் திசை திருப்புவதற்காக உடலில் மின்சாரம் பாய்ச்சியதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து சூர்யாவைக் கைது செய்த போலீசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.