ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்ட்டரில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானிலிருந்த நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளைக் கொன்று பழி தீர்த்தது.
இதனைத் தொடர்ந்து எல்லையோர மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படு பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் புல்வாமாவின் டிரால் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கிறார்களா எனப் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அவர்களில் ஷாஹித் குட்டாய் மற்றும் அட்னான் ஷாஃபி தார் ஆகியோர் சோபியானைச் சேர்ந்த உள்ளூர் வாசிகள் என்பதும், லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடையவர்கள் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஏற்கனவே இவர்களது குடும்பத்துக்குச் சொந்தமான வீடுகள் பஹல்காமில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு இடிக்கப்பட்டன.