பாகிஸ்தானின் குவெட்டாவில் மாகாண உறுப்பினரின் வாகன பேரணியின்போது, பலூச் விடுதலை படை நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
குவெட்டாவின் ஹாக்கி மைதானத்தில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக, பலுசிஸ்தான் மாகாண உறுப்பினர் அலி மதத் ஜடக் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது கையெறி குண்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அலி மதத் ஜடக்கின் பாதுகாவலர்களில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 12 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலை படை பொறுப்பேற்றுள்ளது.
மேலும், இந்தியாவுக்கு எதிரான போரில் வென்று விட்டதாக உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவ பாகிஸ்தான் அரசு முயற்சிப்பதாகவும் பலூச் விடுதலை படை தெரிவித்துள்ளது.