சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, வைகாசி மாத பூஜைக்காக வரும் 19ஆம் தேதி வரை திறந்திருக்கும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
சபரிமலை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில் கோயில் நடை திறக்கப்பட்டு, யோக நித்திரையில் உள்ள ஐயப்பனை எழுப்பி வழிபாடு நடத்தப்பட்டது.
கோயில் நடை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தினமும் வழக்கமான பூஜைகளுக்குப் பின் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும் என்றும், மாதாந்திர பூஜைக்குப் பின் வரும் 19ஆம் தேதி நடை சாத்தப்படும் எனவும் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.