ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை ஈரான் கைவிட்டால்தான் அந்த நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ள அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், அந்த நாட்டின் தலைநகர் ரியாதில் உரையாற்றினார்.
அப்போது, ஈரானின் அணுசக்தி திட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அந்த நாட்டுடன் உடனடியாக ஓா் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறோம் என்றும், இருந்தாலும், நிழல் யுத்தம் நடத்தி வரும் ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு அளிப்பதை அந்த நாடு நிறுத்தியாக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.