கடல் நீரைக் குடிநீராக்குவதற்கான சுத்திகரிப்பு பணிக்காக மிக மெல்லிய வடிகட்டி ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாகப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடல் நீரைக் குடிநீராக்குவதற்கான சுத்திகரிப்பு பணிக்கான ஆராய்ச்சிகளை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் செய்து வந்தது. இந்நிலையில் கடல் நீரைக் குடிநீராக்கும் மிக மெல்லிய வடிகட்டி ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது.
வெறும் 8 மாதங்களில் இது சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. இப்புதிய வடிகட்டியை இந்தியக் கடலோர காவல்படையின் ஒரு ரோந்து கப்பலில் வெற்றிகரமாகப் பொருத்தி சோதனை செய்யப்பட்டதாகவும், அதன் செயல்திறன் திருப்திகரமாக இருப்பது கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், 500 மணிநேர தொடர் சோதனைக்குப் பிறகு அதற்கான முழு அனுமதி கடலோர காவல் படையால் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.