கத்தார் அரசு விருந்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி சந்தித்தார்.
இது தொடர்பான வீடியோவில், கத்தார் அமீர் தமீம் பின் ஹமத் அல் தானியுடனும், அமெரிக்க வர்த்தக செயலாளர் ஸ்டீவ் லுட்னிக் உடனும் அம்பானி கை குலுக்கி சிரித்துக் கொண்டே பேசும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
டிரம்ப் பதவியேற்பு விழாவுக்குப் பின்னர் 2-வது முறையாக அவரை அம்பானி சந்திக்கிறார். டிரம்ப் பதவியேற்பு விழாவுக்கு ஒரு நாள் முன்பாக அவருடன் நெருக்கமான மெழுகுவர்த்தி ஏற்றிய விருந்தில் கலந்து கொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பேரில் அம்பானியும் அடங்குவார் என்பது நினைவுகூறத்தக்கது.