செங்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்தன.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால், தொரப்பாடி, நரசிங்கநல்லூர், அல்லியந்தல், பனைஓலைப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கிச் சேதமடைந்தன.
அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும், அக்ரஹாரம் பகுதியில் நெற்களத்தில் கொட்டி வைத்திருந்த நெல்மணிகள் மழைநீரில் நனைந்ததால் செய்வதறியாது விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.