மெக்சிகோவில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.
மத்திய மெக்சிகோவின் பூப்லா – ஒக்ஸாகா தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இரு வாகனங்களும் மோதிய பிறகு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில், சிக்கி 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.