கோவை சூலூர் விமானப்படைத் தளத்திற்குள் அத்துமீறிச் சென்ற மர்ம நபரைப் பிடித்து விமானப் படையினர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சூலூர் விமானப்படைத் தளத்தில் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி மர்ம நபர் ஒருவர் உள்ளே சென்றுள்ளார்.
அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விமானப் படையினர் அந்த நபரை மடக்கிப் பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.