சென்னையில் மாமூல் தர மறுத்ததால் திமுக பெண் கவுன்சிலர் வண்டிக்கடையை சூறையாடிய நிலையில், பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த பிரேம் தனது வீட்டன் எதிரே, தள்ளு வண்டி வைத்து கடந்த 3 ஆண்டுகளாக உணவுக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் 112-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் எலிசபெத் மற்றும் அவரது கணவர் அகஸ்டின் பாபு ஆகியோர், மாமூல் கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், 25 ஆயிரம் ரூபாய் மாமூல் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த எலிசபெத், மாநகராட்சி ஊழியர்களை மூலம் வண்டிக்கடையை சூறையாடியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பிரேம் தனது குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சமாதானப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.