10 வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் மாணவிகள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ், 8 லட்சத்து 17 ஆயிரத்து 261 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றதாக தெரிவித்தார்.
4 லட்சத்து 78 மாணவர்களும், 4 லட்சத்து 17 ஆயிரத்து 183 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதில் தமிழ் பாடப்பிரிவில் 8 பேர் மட்டுமே முழுமதிப்பெண்னான நூற்றுக்கு நூறை எடுத்து அசத்தி உள்ளனர்.தொடர்ந்து ஆங்கிலத்தில் 346 பேரும், கணிதத்தில் 1,996 மாணவர்களும் நூற்றுக்கு நூறு எடுத்து அசத்தி உள்ளனர்.
இதேப் போல அறிவியல் பாடத்தில் 10 ஆயிரத்து 838 மாணவர்களும், சமூக அறிவியலில் 10 ஆயிரத்து 256 மாணவர்களும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து அசத்தி உள்ளனர்
தேர்வு முடிவுகளின் படி தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் 98.31 விழுக்காடு தேர்ச்சி விகதம் பெற்று முதலிடத்திலும், 97.45 விழுக்காடு தேர்ச்சி விகதம் பெற்று விருதுநகர் 2-ம் இடத்திலும் இருக்கிறது, இதைத்தொடர்ந்து தூத்துக்குடி 96.76 விழுக்காடு தேர்ச்சி விகிதம் பெற்று 3ம் இடத்தில் உள்ளது
தேர்வு முடிவுகளின் படி, தமிழகத்தில் மாணவர்களை விட மாணவிகளை அதிகம் பேர் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளனர்.