கரூரில் போக்சோ வழக்கில் கைதான பள்ளி ஆசிரியர் மற்றும் தாளாளருக்கு தலா 43 ஆண்டுகள் மற்றும் 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
லாலாபேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 10-ம் வகுப்பு மாணவிக்கு பள்ளி ஆசிரியர் நிலவொளி மற்றும் தாளாளர் யுவராஜ் ஆகியோர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
பெற்றோர் புகாரின் பேரில் அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை கரூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
சாட்சி விசாரணை முடிந்து குற்றம் நீரூபிக்கப்பட்ட நிலையில், குற்றவாளிகள் நிலவொளி மற்றும் யுவராஜுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட்டது.