கடும் விலை சரிவு : வாழ்வாதாரத்தை இழந்த இலவம் பஞ்சு விவசாயிகள்!
Oct 9, 2025, 12:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடும் விலை சரிவு : வாழ்வாதாரத்தை இழந்த இலவம் பஞ்சு விவசாயிகள்!

Web Desk by Web Desk
May 16, 2025, 07:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்படும் இலவம்பஞ்சின் விலை அடிமட்டத்திற்கு இறங்கியிருப்பதால் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை அம்மாவட்ட மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. தேனி மாவட்டத்தில் உற்பத்தியாகி வெளிநாடு வரை ஏற்றுமதி செய்யப்படும் இலவம் பஞ்சு குறித்தும், அதன் விலை இறக்கம் பற்றியும் இந்த செய்தி தொகுப்பில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ரம்மியமான சூழலில் அமைந்திருக்கும் தேனி மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயமே திகழ்ந்து வருகிறது. அத்தகைய மாவட்டத்தில் நான்கு திசைகளும் மலைப்பகுதியை உள்ளடக்கிய கடமலை – மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

தென்னை, முருங்கை, இலவம்பஞ்சு, அவரை, கப்பைக் கிழங்கு உள்ளிட்டவைகளோடு, இலவம் பஞ்சு விவசாயமும் பிரதானமாக விளங்கிவருகிறது. இங்கிருந்து உருவாக்கப்படும் இலவம் பஞ்சுகளின் மெத்தை மற்றும் தலையணைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் அதன் விலையோ அதளபாதாளத்திற்கு சென்றிருக்கிறது.

கடந்தாண்டு 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்கப்பட்ட ஒருகிலோ இலவம்பஞ்சு நடப்பாண்டும் அதிக விலைக்கு விற்பனையாகும் என நம்பி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு தற்போது மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிலோ இலவம்பஞ்சு 40 ரூபாய்க்கும் கீழே விற்பனையாவதால் அதனைப் பறிக்காமல் மரத்திலேயே விட்டு விடும் சூழலுக்கு அப்பகுதி விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இலவம்பஞ்சை எடுக்கும் ஆண்களுக்கு ஆயிரம் ரூபாய் கூலியும், பஞ்சை பிரித்துத் தரும் பெண்களுக்கு 400 ரூபாயும் கூலியாக வழங்கப்படும் நிலையில், சாகுபடிக்குச் செய்த செலவைக் கூட எடுக்க முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே மகசூல் கொடுக்கும் இந்த இலவம் பஞ்சு விவசாயம் இந்த ஆண்டு ஏமாற்றத்தைக் கொடுத்திருப்பதால் அடுத்த ஆண்டு சாகுபடி செய்யும் எண்ணத்தையும் விவசாயிகள் கைவிடத் தொடங்கியுள்ளனர். எனவே தேனி மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தலையிட்டு இலவம்பஞ்சுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: இலவம் பஞ்சு விலை சரிவுtn agricultureவிவசாயிகள்Severe price drop: Low-income farmers lose their livelihoodஇலவம்பஞ்சு விவசாயிகள்
ShareTweetSendShare
Previous Post

AI வரமா? சாபமா? : இன்னும் 2 ஆண்டுகளில் காணாமல் போகும் வேலைகள் – சிறப்பு தொகுப்பு!

Next Post

குவியும் சுற்றுலாப்பயணிகள் : போதிய அரசு பேருந்துகள் இயக்கப்படாததால் அவதி!

Related News

ராமநாதபுரம் : வரலாற்றுச் சிறப்புமிக்க திருமலை சேதுபதி கல்வெட்டு கண்டெடுப்பு!

சென்னை : மின்னல் வேகத்தில் தறிகெட்டு ஓடிய கார் – வடமாநில தொழிலாளி பலி!

வேலூர் : திமுகவினருக்கு மட்டுமே தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு – கிராம மக்கள் குற்றச்சாட்டு!

மூதாட்டியின் உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானம்!

நீலகிரி : ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் எருமைப்பால் மதிப்பு கூட்டு மையம் திறப்பு!

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – டென்மார்க்

என் வாழ்வில் தனஸ்ரீயின் அத்தியாயம் முடிந்துவிட்டது – சாஹல்

விமானத்தில் பயணித்த முதியவர் உயிரிழப்பு!

டி20-ல் தனக்கான இடத்தை சுப்மன் கில் சம்பாதிக்க வேண்டும் – ராபின் உத்தப்பா

ரூ.8,576 கோடி இழப்பீடு வழங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ஆணை!

திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி. விவரம் இல்லாமல் பொருட்கள் விற்பனை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் – புதுச்சேரி அரசு எச்சரிக்கை!

கிரிப்டோ கரன்சிகள் திருட்டில் வடகொரிய ஹேக்கர்கள் சாதனை!

ஆஸ்திரேலியா சென்றுள்ள ராஜ்நாத் சிங்கிற்கு, பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

ட்ரம்புக்கு பதிலடி கொடுத்த கிரெட்டா தன்பெர்க்!

ஆஸ்திரேலியாவில் UFC வீரர் சுமன் மொக்தாரியன் சுட்டுக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies