தக் லைப் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.
36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தக் லைப். இதில் சிம்பு, திரிஷா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இப்படம் ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா வரும் 17-ம் தேதி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 24-ம் தேதியன்று இசை வெளியிட்டு விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.