கோவை, கீரணத்தம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் 13 செல்போன்கள் மற்றும் லேப்-டாப்பை மர்ம நபர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சரவணம்பட்டியை அடுத்த கீரணத்தம் பகுதியில் ஐடி துறை சார்ந்த ஊழியர்கள் விடுதிகளில் தங்கி வருகின்றனர்.
இந்நிலையில், அங்குள்ள ஒரு தனியார் விடுதிக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர், 13 செல்போன்கள் மற்றும் லேப்-டாப்பை திருடிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.