கடலூர் மாவட்டம், பெண்ணாடம் ரயில் நிலையத்தில் நின்ற பல்லவன் விரைவு ரயிலை வரவேற்ற பாஜக-வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
பெண்ணாடம் ரயில் நிலையத்தில் பல்லவன் விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாகக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனை ஏற்றுத் தமிழக பாஜக சார்பில் மத்திய ரயில்வே அமைச்சரிடம் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதனடிப்படையில் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் பல்லவன் விரைவு ரயில் நின்று செல்ல ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், பல்லவன் விரைவு ரயில் பெண்ணாடம் ரயில் நிலையத்தில் நின்றதை பாஜக-வினரும், பொதுமக்களும் கொண்டாடி மகிழ்ந்தனர்.