புதுக்கோட்டை மாவட்டம், ஏம்பல் அருகே அசைவ விருந்து சாப்பிட்ட முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குருங்கலூர் வேளாணி கிராமத்தில் சத்யராஜ் என்பவரது மகன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் உறவினர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது அசைவ விருந்து உண்ட பலருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்த கருப்பையா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏம்பல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.