கொல்கத்தா அணியில் இருந்து மொயீன் அலி விலகியுள்ளார்.
இந்தியா- பாகிஸ்தான் சண்டையால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் மீண்டும் தொடங்குகிறது.
அன்றைய தினம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன. இந்த நிலையில் , கொல்கத்தா அணியில் முக்கிய வீரர்களில் ஒருவரான மொயீன் அலி மீதமுள்ள போட்டிகளில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார்.