கோவை அருகே வரதட்சணைக் கேட்டு துன்புறுத்துவதாக போலீசாரிடம் புகார் அளித்த பெண்ணை கணவனின் குடும்பத்தார் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
அன்னூர் பகுதியைச் சேர்ந்த கோமதிக்கும், திருப்பூரைச் சேர்ந்த விஜயானந்த் என்பவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன் திருமணமானது.
கடந்த 6 மாதங்களுக்கு முன் கணவன் வீட்டார் 5 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டுத் துன்புறுத்துவதாக, கோமதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்போது போலீசார் உரிய விசாரணை நடத்தாமல் சமாதானப்படுத்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கணவரிடம் இருந்த தனது குழந்தையைக் கேட்கச் சென்ற கோமதியை, கணவரின் குடும்பத்தார் தாக்கி அனுப்பியுள்ளனர்.
காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், குடும்பத்தினருக்கு போலீசார் உரியப் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியுள்ளார்.