திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார்.
அவருக்குக் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. ஆலய பிரகாரத்தைச் சுற்றி வழிபாடு செய்த அண்ணாமலை அங்கிருந்த பக்தர்களைச் சந்தித்துப் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் பெயரையும், ராசி மற்றும் நட்சத்திரங்களைத் தெரிவித்தும் அர்ச்சனை செய்தார்.