சேலத்தில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லஞ்சப் பணத்துடன் சிக்கிய அரசு ஊழியரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செந்தாரப்பட்டி டவுன் பஞ்சாயத்துச் செயல் அலுவலராக பிரகண்ட நாயகி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் அரசுத் திட்டப் பணிகளுக்கான நிதியை விடுவிக்க ஒப்பந்ததாரர்களிடம் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கமிஷன் கேட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும், அலுவலக உதவியாளர் ஆறுமுகம் என்பவரை அனுப்பி கமிஷன் தொகையைப் பெற்றதாகத் தெரிகிறது.
ஒப்பந்ததாரிடம் நேரில் பணத்தைப் பெற்ற அலுவலக உதவியாளர் ஆறுமுகம், சேலம் காந்தி மைதானம் அருகே உள்ள தனது நண்பரின் மின்சாதன விற்பனை கடையில் பணத்தை வைத்துள்ளார்.
இது குறித்து அறிந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பணத்தை கைப்பற்றிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.