திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் சாமி தரிசனம் செய்தார்.
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து வரும் 18ஆம் தேதி காலை 6.59 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் மூலம் இஓஎஸ்-09 செயற்கைக்கோள் ஏவப்படுகிறது.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இஸ்ரோ தலைவர் வி.நாராயணனும், விஞ்ஞானிகள் குழுவினரும் சாமி தரிசனம் செய்தார்.
செயற்கைக்கோளின் மாதிரியை எடுத்துச் சென்று சிறப்பு வழிபாடு நடத்திய இஸ்ரோ நிர்வாகிகளுக்கு, ஸ்ரீ ரங்கநாயக மண்டபத்தில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், இஸ்ரோ – நாசா இணைந்து செயற்கைக்கோளை அனுப்பவுள்ளதாகவும், மங்கள்யான் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.