அமெரிக்கப் பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள டிரம்ப் கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, வரி இல்லாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா விருப்பம் தெரிவித்தது எனக் கூறினார். முன்னதாக ஏப்ரல் 2ஆம் தேதி இந்தியா, சீனா உள்ளிட்ட உலகின் பல நாடுகளுக்கு டிரம்ப் பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார். அமெரிக்காவின் வரி விதிப்புக்குச் சீனா மட்டுமே எதிர்வரி விதித்து எதிர்வினையாற்றியது.