நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஒரு மணி நேரம் நீடித்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
காலை முதலே உதகையில் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், மதிய நேரத்தில் கனமழை பெய்தது. சேரிங்கிராஸ், மத்திய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பிங்கர் தபால், தலைகுந்தா, காந்தள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது.
இதனிடையே, கனமழையின் காரணமாகத் தாழ்வான பகுதிகளில், சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர். உதகை மத்திய பேருந்து நிலையம், ஹில்பங்க் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில், குளம் போல் தண்ணீர் தேங்கியது.