மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் பலர் பலியாகினர்.
நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று முந்திச் செல்ல முயன்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்குச் சென்று தண்ணீரைப் பீய்ச்சியடிப்பதற்குள் பேருந்திலிருந்த 21 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
படுகாயம் அடைந்த பலருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.