இண்டி கூட்டணி பலவீனமாக உள்ளதாகவும், பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இண்டி கூட்டணி தற்போது ஒற்றுமையாக இருந்தாலும், பலவீனமாக இருப்பதாகக் கூறினார். ஆனால், சில நிகழ்வுகள் மூலம் அதைப் பலப்படுத்த முடியும் எனவும், அதற்கான கால அவகாசம் உள்ளதாகவும் ப. சிதம்பரம் தெரிவித்தார். இந்நிலையில் இதற்கு எதிர்வினையாற்றியுள்ள பாஜக, காங்கிரஸுக்கு எப்போதும் எதிர்காலம் இல்லை என விமர்சித்துள்ளது.