சிக்கிம் மாநில அந்தஸ்து பெற்ற 50-வது ஆண்டு தின கொண்டாட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இதில் டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, அமைச்சர்கள் ஆஷிஷ் சூட், கபில் மிஷ்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, ஒவ்வொரு மாநிலத்தின் முக்கிய நாட்களை ஒரு திருவிழாவாகக் கொண்டாட டெல்லி அரசு முயற்சிக்கும் எனத் தெரிவித்தார்.
மேலும், டெல்லியில் வசிக்கும் அனைத்து சிக்கிம் மக்கள் மீதும் டெல்லி அரசு தனிக் கவனம் செலுத்தும் என உறுதியளிப்பதாகவும் ரேகா குப்தா தெரிவித்தார்.