உதகை மலர்க் கண்காட்சியை ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 127-வது மலர்க் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், பல லட்சம் வண்ண மலர்களைக் கொண்டு ராஜராஜ சோழனின் அரண்மனை, பட்டத்து யானை, அரண்மனைக் காவலர்கள், கல்லணை, உள்ளிட்ட 24 வடிவமைப்புகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கோடை விடுமுறையைக் கொண்டாட வந்த சுற்றுலா பயணிகள், மலர் அலங்கார வடிவமைப்புகளை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். இதுதொடர்பான ரம்யமான கழுகு பார்வை காட்சி வெளியாகி வியக்க வைத்துள்ளது.