உதகையில் 127-வது மலர் கண்காட்சி நடைபெறும் பகுதி சேறும், சகதியுமாக இருந்ததால், நடந்து செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால், முக்கிய சுற்றுலா தல பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும், 127-வது மலர் கண்காட்சி நடைபெறும் பகுதி முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளித்தது.
இதனால், கண்காட்சியை ரசிக்க முடியாமல், சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர். தோட்டக்கலை துறையினர் நுழைவு கட்டணமாக 125 ரூபாய் வசூலிப்பதாகவும், பூங்காவில் கழிப்பறைகள் கூட சுத்தமாக இல்லை என்றும் சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டினர். மேலும், பராமரிப்புகள் ஏதும் செய்யாமல் பூங்கா நிர்வாகம் அலட்சியத்தோடு செயல்படுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.