கர்நாடக மாநிலத்திலிருந்து ஓசூர் நோக்கி வெங்காயம் ஏற்றி வந்த சரக்கு லாரி ஓசூர் தர்கா மேம்பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இதனால் லாரியில் இருந்த வெங்காய மூட்டைகள் சர்வீஸ் சாலையில் விழுந்தன. இதையடுத்து சிதறிக் கிடைந்த வெங்காயத்தை அப்பகுதி மக்கள் முடிந்த வரை பைகளில் அள்ளிச் செல்ல முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெங்காய உரிமையாளர், வெங்காயத்தை எடுத்துச் செல்ல முயன்றவர்களை விரட்டினார்.