டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு செய்த ஊழலை விட மெகா ஊழல் தமிழகத்தில் டாஸ்மாக்கில் நடைபெற்றுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் டிடிவி தினகரன் கூறினார்.