ஈட்டி எறிதலில் புதிய சாதனை படைத்த நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார.
டைமண்ட் லீக் தடகள போட்டியின் 16 ஆவது சீசன் கத்தாரின் தோகாவில் நடைபெற்று வருகிறது. இதில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 90 புள்ளி 23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நீரஜ் சோப்ராவின் இடைவிடாத அர்ப்பணிப்பு, ஒழுக்கம், ஆரவத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாக தெரிவிதுள்ளார். அவரது சாதனையால் இந்தியா பெருமை கொள்வதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.