தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உலக அழகிப் போட்டியில் பங்கேற்பதற்காக வருகை தந்த போட்டியாளர்களின் பாதங்களை இந்தியப் பெண்கள் கழுவும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இது காலனித்துவ மனப்பான்மையின் செயல் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தெலங்கானா மாநில பாஜக தலைவர் கிஷன் ரெட்டியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.