பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தியா தியா பாடலை படக்குழு வெளியிட்டது.
இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் புகழ் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் சித் ஸ்ரீராம் பாடி உருவாகியுள்ள தியா தியா பாடல் பலரையும் கவர்ந்துள்ளது.