ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டது.
நாவலூர் பகுதியில், வட இந்திய உணவகமான தாபா செயல்பட்டு வருகிறது. எதிர்பாராத விதமாக ஓலைக் கொட்டகையில் ஏற்பட்ட தீப்பொறி மளமளவென பரவியது.
இதனையறிந்த உணவக ஊழியர்கள் மற்றும் சாப்பிட வந்தவர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.