லக்னோ அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் காயம் காரணமாக எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் வில்லியம் ஓ ரூர்க் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவர் 3 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.