விராட் ஓய்வை அறிவிக்கும் முன்னர் தான் அவரிடம் பேசியதாக இந்திய முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு ஒரு வாரம் முன்பாக தான் விராட் கோலியிடம் பேசினேன் எனத் தெரிவித்தார்.
அப்போது அனைத்தையும் கொடுத்து விட்டோம் என்ற தெளிவு விராட்டின் மனதிலிருந்தது எனவும், அவரிடம் எந்த கவலையும் வருத்தமும் இல்லை எனவும் ரவி சாஸ்திரி கூறினார்.